கோவையில் தடாகம் காப்புகாடு மலை அடிவாரத்தில் நீர் வழித் தடங்களை மூடி வீட்டுமனை அமைக்கும் பணிகள் சமூக ஆர்வலர்கள் பதிவு செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ காட்சி வைரல்.
காப்புகாடு மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் நஞ்சுண்டாபுரம் வருவாய் கிராமத்துகுட்பட்ட பொன்னூத்தம்மன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள நீர் வழிதடங்களில் 3 தடுப்பாணைகளை மூடி மண் நிரப்பி வீட்டுமனைப் பிரிவுகளாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

கோவையில் தடாகம் காப்பு காடு, மலை பகுதி அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் நீர் வழித் தடங்களில் இரண்டு செக் தடுப்பாணைகளை மூடி, மண் நிறப்பி வீட்டுமனை பிரிவுகளாக அமைக்கும் பணிகள் நடந்து வரும் வீடியோ காட்சிகளை சமூக ஆர்வலர்கள் சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இது யானைகள் உலாவும் பகுதிகளாகவும், மனிதர்கள் வாழ்விடமாகவும் திகழ்ந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் வன விலங்குகள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது.இங்கு நீர் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளையும், மற்றும் நீர் வழித் தடங்களையும் மூடி மண் கொட்டப்பட்டு உள்ளது. இந்த நீர் வழித் தடங்கள் கணுவாய் தடுப்பனையைச் அடைந்து சங்கனூர் ஓடையாக செல்லக் கூடியவை ஆகும்.

இங்கு நீர் வழித் தடங்கள் குறிப்பாக தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் இந்த தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் அதிக அளவில் துவங்கியும், தொடங்கியும் செயல்பட்டு நடைபெற்று வருகிறது. தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் உள்ள மூன்று பக்கம் சூழப்பட்ட மலைகளில் உள்ள 112 சிற்றோடைகள் உருவெடுத்து நான்கு பெரிய ஓடைகளில் சங்கமமாகி, கணுவாய் தடுப்பணையை சென்றடைகிறது.
இதற்கு உண்டான நீர் வழித் தடங்கள் சிற்றோடைகள் பெரிய ஓடைகள் அனைத்து ஓடைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மண்ணைக் கொட்டி முடியும் வருகின்றனர். இதை வருவாய் துறையினரோ மற்றும் வன துறையினரோ மட்டுமன்றி உள்ளாட்சி அமைப்பினரும் கண்டு கொள்வதில்லை.இந்த பகுதியில் மலை அடிவாரத்தில் வழிதடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வனவிலங்குகள் மாற்றுபாதையில் செல்வதால் மனிதர்கள் வாழும் பகுதியில் விலங்குகள் நுழைந்து மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாவதோடு, விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
அதனால் சம்பந்தப்பட்ட வனத்துறை, வருவாய் துறையினரோடு மாவட்ட நிர்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.