ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இல்லை – உயர் நீதிமன்றம் .!

3 Min Read
  • அரசு நிலம் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் நீதிமன்றத்தில் ஆஜர்.
  • அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரங்களில் ஊராட்சி மன்ற தலைவரோ, வட்டார வளர்ச்சி அலுவலரோ நோட்டீஸ் அனுப்பக் கூடாது என தெரிந்தும் நோட்டீஸ் அனுப்பியது ஏன் நீதிபதிகள் கேள்வி?
  • அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரங்களில் ஆக்கிரமப்பை அகற்ற ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்க அதிகாரம் கொடுத்தது யார்? எந்த பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது? – நீதிபதிகள் கேள்வி.
  • தமிழ்நாடு ஆக்கிரமிப்பு அகற்றும் விதிகள் சட்டத்தை வருவாய் துறையினர் முறையாக பின்பற்ற வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த கண்ணுச்சாமி என்ற முதியவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அதில், ” நான் 73 வயது மூத்த குடிமகன். மண்குண்டம்பட்டி கிராமத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன். எனது வீட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் பாதை அமைந்துள்ள நிலையில், பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக என் மீது பழனிச்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். உரிய விதிகளை பின்பற்றாமல் எனது வீட்டை அகற்ற முயன்றதால், நான் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீடு அமைந்துள்ள கிராமத்தில் அனைத்து தெருக்களையும் முறையாக அளந்து ஆக்கிரமிப்புகள் இருப்பின் அதனை அகற்ற உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நில அளவீடு செய்யப்பட்டது. ஆனால் அளவிட்டு அறிக்கை எனக்கு வழங்கப்படவில்லை. ஆனால் எனது வீடு கட்டப்பட்டுள்ள இடம் ஆக்கிரமிப்பு இல்லை என வாய்மொழியாக தெரிவித்தனர்.

எனது வீடு பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான சிட்டாவும் எனது பெயரில் உள்ளது. இந்நிலையில் எனது வீட்டை ஆக்கிரமிப்பு எனக் கூறி அதனை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஆக்கிரமிப்பு எனக் கூறி எனது வீட்டை அகற்றும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, அது வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற ஊராட்சி மன்ற தலைவரோ வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் வழங்கக் கூடாது என உத்தரவு இருந்தும் அதை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரும் சம்பந்தப்பட்ட தாசில்தார் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சிவகாசி தாசில்தார் வடிவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ் ஆகையூர் நீதிபதிகள் முன் ஆஜராகினர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/ex-minister-senthil-balajis-case-against-witness-can-continue-chennai-high-court-orders/

அப்பொழுது நீதிபதிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து விரிவான சட்டம் உள்ளது அது தெரியுமா . மேலும் அந்த சட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்புவதற்கான அதிகாரம் உள்ளதா? ஆக்கிரம்பு அகற்றுவது குறித்து வருவாய்த்துறையினர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் , என தெரிந்தும் இது போன்ற நோட்டீஸ் அனுப்புவது ஆக்கிரமிப்பு நபர்களை பாதுகாக்கும் ஒரு விதமான நடவடிக்கை என தெரிவித்த நீதிபதிகள்.

மேலும் விசாரணை நீதிமன்றங்களில் வழக்கு நிலுவை இருந்தாலும் நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள் , இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள 59 ஆக்கிரமப்பாளர்களுக்கும் உரிய நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.

Share This Article
Leave a review