காவடியாட்டம் ஆடி கலைஞர்களை உற்சாகப்படுத்திய-பாஜக தலைவர் அண்ணாமலை

0
32
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவையில் பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கடந்த  வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் நதிகளுக்காக விழா எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, காவிரி உற்பத்தியாகக் கூடிய குடகு முதல் காவேரிபூம்பட்டினம் வரை ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் யாத்திரை சென்று பொதுமக்களிடையே நீா் மேலாண்மை, நீரைத் தூய்மையாக வைப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காவிரி புஷ்கரணி, மகா மகத்தின்போது நதிகளுக்குப் பெருவிழா எடுத்தோம். அதைத்தொடா்ந்து, தென்பெண்ணை, பாலாறு, தாமிரவருணி, வைகை ஆகிய தமிழக நதிகளுக்கும், வடஇந்தியாவில் பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை போன்ற பல நதிகளுக்கும் பெருவிழா எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பாலாற்றில் ஐந்து நாட்கள் பெருவிழா நடத்தப்பட்டது.

அதேபோல, நொய்யல் ஆறு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நொய்யல் பெருவிழா ஆகஸ்ட் 25 முதல் 31-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடந்து வருகிறது.

இதில் சிறுவா்கள், கல்லூரி மாணவா்களிடையே நொய்யல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் இரு கருத்தரங்குகள், அதிகாலையில் வேள்விகள் நடைபெறும். மாலையில் கங்கையில் நடைபெறுவதுபோல ஏழு மேடைகள் அமைக்கப்பட்டு ஏழு ஆரத்திகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நொய்யல் ஆற்றின் கரையில் நடைபெறுகிறது.

ஐந்தாம் நாளான இன்று, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு காவடி குழுக்களின் சார்பில் காவடியாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அண்ணாமலையும் காவடி எடுத்து ஆட ஆரம்பித்தார். இசைக்கு ஏற்ப அண்ணாமலை ஆடியது , காவடியாட்ட கலைஞர்க்ளை உற்சாகப்படுத்தினார். இதனையடுத்து அவர் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த நொய்யல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here