பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு கடிதம்

2 Min Read
அண்ணாமலை கடிதம்

பாஜகவின் ஐவர் குழு சந்திப்புக்கு இம்மாத்தில் நேரம் ஒதுக்கி தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக திமுக இடை கடந்த காலங்களில் தொடர்ந்து அறிக்கை,பேட்டிகள் என பல போராட்டங்கள் நடத்தி வருகின்றன.எதிர் வரும் நாடாளுமன்ர தேர்தலை எதிர் நோக்கி இன்னமும் தொடர் அறிக்கை போர் நடந்து வருகிறது.இதற்கு முன்னர் இருந்த தமிழக பாஜக தலைவர்களில் அண்ணாமல் சற்று வித்தியாசமாக திமுக வை எதிர்த்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனை பேசு பொருளாக ஆகி விட்டது.இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் மது பிரச்சனையை மையப்படுத்தி பாஜக தேர்தலை சந்திக்க திட்டமிட்டுருப்பது தெரியவருகிறது.இந்த நிலையில் தமிழக அரசுக்கு மதுக்கடைகளை மூட அழுத்தம் தர தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

மது இல்லாத தமிழகம் திட்டத்தை நிறைவேற்றிட, தமிழக பாஜக தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் ஐவர் குழு சந்திப்புக்கு இம்மாத்தில் நேரம் ஒதுக்கி தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

இதுதொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

ஆகவே, தாங்கள், வருகின்ற ஜூலை 11ம் தேதி முதல் 13ம் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்புக்கு ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களது மேலான பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.அண்ணாமலையின் கடிதம் தமிழக அரசியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது.அண்ணாமலை எழுதிய கடிதத்திற்கு தமிழக முதல்வர் சார்பில் என்ன பதிலலிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.தமிழக முதல்வர் ஸ்டாலினின் பதிலை பொருத்து தான் எதுவும் தெரிய வரும்.

Share This Article
Leave a review