கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது உறுதியானது.அங்கு இறுதியாக கிடைத்த தகவலின்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் 129 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களையும் கைப்பற்றின.
மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்களையும், சுயேச்சைகளையும் இணைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று கருதிய பாஜகவின் முடிவு தவிடு பொடியானது.

அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களையும் பெங்களூருக்கு வருமாறு மாநில தலைவர் டி கே சிவகுமார் உத்தரவிட்டார். பெரும்பான்மை வெற்றி என்ற தேர்தல் முடிவுக்கு வந்துவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர்.
ஆனாலும் காங்கிரஸ் வெற்றி பெற்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க தயாராக உள்ளது பாரதிய ஜனதா என்கிற அச்சம் காங்கிரஸ் மத்தியிலே இருந்து வருகிறது. அதனால் உடனடியாக அனைவரையும் தனி ஹெலிகாப்டர் மூலமாக ஒரு இடத்தில் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தொங்கு சட்டமன்றம் அமையலாம் அப்போது எப்படியானாலும் தன்னுடைய ஆதரவு நீ காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிக்கு தேவைப்படும் அப்போது முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி கேட்கலாம் என்கிற நினைப்போடு இருந்த மதசார்பற்ற ஜனதா தல கட்சியின் தலைவர் குமாரசாமி எண்ணத்தில் மண் விழுந்தது.
இந்தத் தேர்தலில் வெற்றி எதிர் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற நம்பிக்கை அரசியல் ஆர்வலர்கள் இடையே நிலை வருகிறது. மேலும் பாஜக அடுத்த முறை பிரதமராகும் வாய்ப்பை இழப்பதற்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது என்றும் கருதுகிறார்கள்.