ஆட்சியைப் பிடிக்க போவது யார் கர்நாடகாவில்… நான்கு முனைப்போட்டி

2 Min Read
சித்தராமையா பசவராஜ் பொம்மை குமாரசாமி

கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஏதுவாக உள்ளதாக தெரிவித்தாலும் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவை நாட வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கின்றன.கர்நாடகாவில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான தேர்தல் உத்திகளை கையாண்டு வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image

மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ள நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
மார்ச் 29ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்பினை வெளியிட்டது.
அதில் ஏப்ரல் 13-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடக்கம் என்றும் ஏப்ரல் இருபதாம் தேதி வேட்ப்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றும் ஏப்ரல் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வேட்ப்புமனுக்கள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஏப்ரல் 24ஆம் தேதி வேட்ப்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசிதேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் மே மாதம் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்க வேண்டும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது இதில் 113 தொகுதிகள் வெல்லும் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தகுதியானதாக இருக்கும்.
ஆட்சி பிடிக்க பாரதிய ஜனதா கட்சி மும்பரமாக வேலை செய்து வரும் நிலையில் காங்கிரஸூம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவை இந்திய தேசிய காங்கிரஸும்,பாரதிய ஜனதா கட்சியும் அணுக வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்து தனக்கான பிரதிநிதித்துவத்தை பெற முயற்சி செய்து வருகிறது.

தனியார் நிறுவன கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஏதுவாக உள்ளதாக தெரிவித்தாலும் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவை நாட வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான தேர்தல் உத்திகளை கையாண்டு வருகின்றன.

தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். கடைசியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, எனவே காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அடுத்த 14 மாதங்களில் பாஜக இந்த ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால் வருகின்ற தேர்தலில் எப்படியாவது பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியாக வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது காங்கிரஸ்.

இந்த தேர்தலில்  போட்டியிடும் கட்சிகளின் பிரதான கட்சியாக கருதப்படும் காங்கிரஸ் 168 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆனால் பாஜக இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை இன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலை எப்படி கையாளுவது என்கிற ஆலோசனையில் தொடர்ந்து இருந்து வருகின்றன ஒரு சில நாட்களில் தேர்தல் பரபரப்பு பெருமளவு கர்நாடகாவில் தொடங்கும்.

Share This Article
Leave a review