பாஜக வேட்பாளர் பட்டியலில் பெண்கள்,மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,ஐஏஎஸ்,கல்வியாளர்கள் என மக்களை கவர வேட்பாளர்கள்.

2 Min Read
பாஜக வேட்பாளர் தேர்வு

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெரும் கர்நாடக தேர்தலில்  போட்டியிடும் 189 வேட்பாளர்களை கொண்ட
முதல்கட்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு இருக்கிறது.
இதில் 52 புதிய வேட்பாளர்களுக்கு பாஜக வாய்ப்பு அளித்து இருக்கும்
நிலையில் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று
அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

கர்நாடக சட்டசபை
தேர்தலில் காங்கிரஸ் பிஜேபி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின்போட்டி அதிகமாக இருக்கும் நிலையில் நான்காவதாக ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது.ஆட்சியைதக்க வைக்க ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து உள்ளது.இந்த ஆண்டில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவுக்கு பல முறை பயணம்
சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். அதேபோல்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியஅமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என கட்சியின் பல தலைவர்கள் கர்நாடகாவில்முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

எடியூரப்பா அவரது மகன் விஜயேந்திரா

காங்கிரஸ் கட்சியோ ரகசியமாக பல திட்டங்களை தீட்டி வருகிறது
அதேபோல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன்தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் குதித்துள்ளன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 166 இடங்களில்
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டு அங்குபிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இருக்கிறது. அதே நேரம் பாஜகவோ வேட்பாளர்கள் தேர்வில் தீவிர
கவனம் செலுத்தி வந்தது. பாஜக தேசிய தலைமையே இதில் நேரடியாக தலையிட்டு வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டது.
இந்த நிலையில் எந்த குழப்பமும் இருக்க கூடாது என்பதற்காக நேற்று முந்தினம் கர்நாடக தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர்பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில்  கர்நாடக தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.

வேட்பாளர் பட்டியல்

இந்த வேட்பாளர்கள்பட்டியலில் 8 பெண்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். அதேபோல் 31 பேர் முதுகலை பட்டம் படித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் 9 மருத்துவர்களும், 5 வழக்கறிஞர்களும், 3 கல்வித்துறையை சார்ந்தவர்களும், ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர்,
8 சமூக செயற்பாட்டாளர்கள், 3 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்.” பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review