வேஷம் போடும் பாஜக – அதிமுக கள்ளக் கூட்டணி, மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்..!

3 Min Read

திமுக தலைவரும் முதல் வருமான மு.க ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது;

- Advertisement -
Ad imageAd image

திமுக ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாடு மக்களின் நம்பிக்கை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. நமது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையில் நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயன் அளித்து வருகின்றன. அதே நேரத்தில் மாநிலங்களின் வளர்ச்சியை விரும்பாத மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத மாநிலங்களுக்கு போதிய நிதியளிக்காத மாநிலங்கள் என்ற கட்டமைப்பு இருக்கக் கூடாது, என்ற கொள்கையை கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்பீக்கிங் பார் இந்தியா என்ற நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியிருக்கிறேன். கலைஞர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி கொள்கையும் அதன் இன்றைய தேவையும் அந்த உரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். தமிழிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாகி உள்ள அந்த உரையை உடன் பிறப்புகள் ஆகிய நீங்கள் கேட்டீர்கள் என நம்புகிறேன். அதனை எல்லாரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பணியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்முகத்தமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாத கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்திய கூட்டணி உருவாகி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில் திமுக பங்கு மகத்தானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட தமிழ்நாடு புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அண்ணமலை எடப்பாடி பழனிசாமி

அதற்கான கட்டமைப்பை இந்திய கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கி விட்டோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட்டது. அதே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுகவில் ஏற்கனவே உள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஒரு தொகுதிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரமும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு அதன்படி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிறைவடைந்துள்ளது. வெறும் கோடிக்களையும் கூட்டமாக இல்லாமல் கொள்கையை தெளிவுடனும் அந்தக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கத் தேவையான தொழில்நுட்ப பயிற்சி உடனும் இந்தக் கூட்டங்கள் மிகச்சிறந்த பயிலரங்குகளாக நடைபெற்று இருக்கின்றன.

திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் வரை களத்தில் பணியாற்றும்போது திமுக தலைவர் என்ற பொறுப்பை உங்களால் அடைந்த திமுகவின் மூத்த துண்டனான உங்களில் ஒருவன் ஆன நானும் தமிழ்நாடு முழுவதும் பயணித்து வருகிறேன். அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு எந்த அளவில் பயன்களை தருகின்றன. எந்தெந்த திட்டங்களில் சுருக்கம் தெரிகிறது. அவற்றை மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை நான் மாவட்ட தோறும் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கி பணிகளை விரைந்து நிறைவேற்றச் செய்து வருகிறேன். திமுக என்றென்றும் வலிமையுடன் திகழ்ந்து ஆதிக்க சக்தி நிறைய அவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டத்தினரையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என்பதற்காக அயராத பாடுபடும் மூத்த உறுப்பினர்களை தம்பி உதயநிதி மதித்து போற்றுகின்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இந்திய கூட்டணி

இளைஞர் அணி சார்பில் வரும் டிசம்பர் 17ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணி மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல நாட்டு மக்களின் விடுதலைக்காக. ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவின் கைகளில் இருந்து காப்பாற்றும் வகையிலும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்து விட்டு, இப்போது கூட்டணி முறிந்து விட்டதாக வேடம் போடும் அதிமுகவின் கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். நாற்பதும் நமதே நாடும் நமதே என்று கடந்த 2022 ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன்.

அதை செயல்படுத்தும் விதங்கள் வலுப்பெற்று இன்று இந்தியா முழுவதும் பாஜக அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான். ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்கு சாவடியாகக் களம் காணபடும் திமுக படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review