பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல். ஏ., வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பு.

6 Min Read
சட்ட மன்ற உறுப்பினர்
  • பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல். ஏ., வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பு.

    கோவை V.K.K மேனன் சாலையில் அமைந்து உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது :-

    2 விஷயங்களுக்காக சந்திக்க விரும்பினேன்.

    ஒன்று மத்திய அரசால் கடந்த வருடம் விஸ்வ கர்மா திட்டம் என்பது தமிழக அரசால் வேண்டுமென்று புறக்கணிக்கப்படுகிறது. மிக எளிமை நிலையில் இருந்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றக் கூடிய கைவினை கலைஞர்களின் நலன் தமிழக அரசால் மறுக்கப்படுகிறது. 18 வகையான கைவினை கலைஞர்கள் இணையத் தளம் வாயிலாக பதிவு செய்த பின், மாவட்ட உள்ளிட்ட அளவில் விண்ணப்பதாரரின் விவரம் பரிசோதிக்கப்பட்டு, உத்தரவாதம் இல்லாமல் பணம் கொடுக்கும் திட்டத்தை, பல்வேறு வகையான எளிய மக்களை பலன் அளிக்க கூடிய திட்டத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்து உள்ளது. எப்போது இந்த திட்டத்தை அமல்படுத்துவார்கள் என காத்து கொண்டு இருக்கிறோம். செப்டம்பர் 17 விஸ்வகர்மா ஜெயந்தி அன்று இந்த திட்டத்தை தொடங்குவதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். குலத்தொழில் என்ற ரீதியில் இந்த திட்டத்தை ஒரு சிலர் எதிர்க்கின்றனர். ஜாதி என்று சொல்லி மக்களை திசை திருப்ப தமிழக அரசு புறக்கணிக்கிறது, தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கிறது.

    தமிழக அரசு அறிவிக்கவில்லை என்றால் பா.ஜ.க போராடும். தமிழகத்தில் அதிகளவு பெண்கள் தான் பதிவு செய்து உள்ளனர். கட்சிக்காக, இடைத்தரகர்கள் இன்றி வெளிப்படைத் தன்மையோடு இலஞ்சம் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

    தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். இதை தவிர நேரடியாகவும் பதிவு செய்து உள்ளனர்.

    பா.ஜ.க ஆளும் மாநில மக்கள் இந்த திட்டத்தின் பயனை அடைந்து வருகின்றனர்.


    அண்ணப்பூர்னா உரிமையாளர் விவகாரம் தொடர்பாக விளக்கம்.

    மத்திய அமைச்சர் 18 குழுவாக அழைத்து வந்து ஒரே இடத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் என சொன்னார். ஜி.எஸ்.டி., மட்டும் 3 குழுக்கள் இருந்து உள்ளனர். மிகப்பெரிய முயற்சியை கொங்கு மண்டலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் வந்தவுடன், அதிகாரிகள் தொழில் துறையினர் குறைகளை கேட்டு, பொது இடத்தில் மத்திய அரசின் திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நேரடியாக உரையாடுகிறார். கோவையை சேர்ந்த உணவக சங்கத்தின் கௌரவ தலைவர், அனைவராலும் மதிக்கப்படுகிறார், எனக்கு சகோதரர் மாதிரி, ஜி.எஸ்.டி., தொடர்பாக பேசுகிறார். நல்ல எண்ணத்துடன், என்னுடைய வேண்டுகோள் ஏற்று மத்திய அமைச்சர் வரும் போது, ” எம்.எல். ஏ., அம்மா ஜிலேபி, சாப்பிடுவார், சண்டை போடுவார் ” என சொன்னார். உடனே அந்த இடத்தில் நாங்கள் react செய்யவில்லை. என்னால் எத்தனை முறை வந்து உள்ளேன், ஜிலேபி சாப்பிட்டு உள்ளேன் என கேட்டு இருக்க முடியும், ஆனால் பொது இடன் என்பதால் தவிர்த்து விட்டேன். அடுத்த நாள் காலை முதல் எனக்கு போன் செய்து, நான் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார். ஆனால், காலை மத்திய அமைச்சரின் நிகழ்வு இருந்தால் , மதியம் பார்க்காமல் என்று சொன்னேன்.

    “இணையத்தில் பார்த்தேன், தவறாக சென்ற விஷயம் நான் வருத்தம், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.” நான் ஆர்.எஸ்.எஸ்., சார்ந்தவன் என்றெல்லாம் சொன்னார். ஜி.எஸ்.டி., தொடர்பாக எது சொல்லி இருந்தாலும் நான் பதில் சொல்வேன், ஆனால் பெண் எம்.எல். ஏ., வாடிக்கையாளர் தொடர்பாக நீங்கள் பேசலாமா, முறையாக என மத்திய அமைச்சர் கேட்டார். அதற்கு, என்னிடமும் சகோதரி மாதிரி என சொல்லி மன்னிப்பு கேட்டார்.

    ஆனால், இந்த வீடியோக்கள் ஒரு சில கட்சிகளின் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். எங்கள் கட்சிக்காரர்களுக்கு வருத்தம் உள்ளது.
    அரசியல் சவால், போராட்டம் நிறைந்த பாதை, இன்றும் அரசியலில் பெண் அரசியல்வாதியாக சவால் நிறைந்தது. ஆனால், பெண் அரசியல்வாதி என்பதாலேயே கருணை காட்ட சொல்லவில்லை. ஆனால், அதே மேடையில் ஆண் அமைச்சர், ஆண் எம்.எல். ஏ., இதுபோன்று பேச்சு வந்திருக்குமா? ஆளுங்கட்சியில் மாநில அமைச்சர் ஒருத்தர் அனைவரையும் ஒன்றிணைந்து தேர்தல் அல்லாத சமயத்தில் வந்திருக்கிறார்களா? அமைச்சர், எம்.எல். ஏ, போது வெளியில் செல்லும் போது, கனிமொழி, ஜோதிமணி கூட செல்லும் போது சூழந்து கேட்கும் கேள்வி வீடியோ இயல்பாக உள்ளது. சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்திற்கு என்றாலும், பெண் என்று பார்வை இருக்கு. சமூகத்தின் மனப்போக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மிரட்டி அவரை வந்து மன்னிப்பு கேட்க வைக்கிறோம் என சொல்லப்படுகிறது, இதில் சாதியை வேறு இழுக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சமூக நீதி பேசக் கூடிய தி.மு.க ஆளும் மாநிலம் பட்டியலின மக்கள் மீது நடக்கும் தாக்குதல் முதன்மை மாநிலமாக மாறி வருகிறது. அந்த சமூக நீதி பற்றி யாரும் பேசவில்லை.

    ஆனால் ஒரு பெண்மணி உயர்ந்த பொறுப்பில் உள்ளவர், இவர் செய்யும் தவறுகளை, கேள்விகளுக்கு தமிழில் பாராளுமன்றத்தில் பட்டியலிடுகிறார், பொய்களை டெல்லியில் தோலுரித்து செய்கிறார் என்பதால் சாதியை கொண்டு வந்து தி.மு.க வின் வழக்கமான அரசியலை செய்து வருகின்றனர். உண்மையாக சமூக நீதி என்பது அனைத்து சாதிகளையும் சமமான மரியாதை கொடுப்பது தான். கேள்வி கேட்டவரின் உண்மை தன்மை இருந்தால் அவரது சாதியை பற்றி பேசுவது தான் தமிழக அரசியலில் நடப்பது. நான் சொன்னதில் தவறு இருக்கிறதா என்பதை சீனிவாசனிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    அரங்கத்தில் நடக்கு கூட்டத்தில் பெண் அமைச்சர், பெண் எம்.எல். ஏ., பற்றி அநாகரீகமாக பேசி இருக்கலாமா? இத்தனை பேர் மீது பேசிவிட்டு, மன்னிப்பு கேட்பது, எவ்வாறு செய்கிறது? தொழில் அமைப்புகளுடனான கலந்துரையாடல் நிகழ்வுக்கு பின்னும் பல அமைப்புகளுடன் மத்திய நிதி அமைச்சர் பேசிய நிகழ்ச்சி தொடர்பாக இந்த முயற்சி பெற்ற யாராவது பேசினார்களா? ஆனால் ஜி.எஸ்.டி., பற்றி பேசியது மட்டும் எப்படி தமிழகத்தில் இந்தளவுக்கு செல்கிறது? மன்னிப்பு கோரும்பொது, அந்த அரங்கில் இருந்தவர்கள் அவரவர் சமூக வலைத்தள பக்கத்தில் போட்டால் நான்கள் என்ன சொல்வது.

    ஹோட்டல் நிர்வாகத்தை, உரிமையாளரை வற்புறுத்தி, மிரட்டியோ, கேட்டோ அவர் வரவில்லை. எங்கள் தரப்பில் இருந்து அவரை கேட்டோமோ என்ற அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீ்தாராமன் தொடர்பாகவும் தி.மு.க, காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் target செய்கிறார்கள். ஏனெனில், சென்னை மெட்ரோ தொடர்பாக தி.மு.க சொல்லி வந்த பொய்யுக்கு, மத்திய நிதி அமைச்சர் தோலுறித்ததால், தமிழில் சொல்லி விடுவதால் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குகின்றனர்.

    கட்சிக்காரர்கள் ஒரு பக்க action, மறுபக்கம் reaction வர தான் செய்யும். மீண்டும் மீண்டும், அந்த விவகாரத்திற்குள் போக விரும்பவில்லை. நடந்தது தொடர்பாக தான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

    மற்ற தொழில் அமைப்புகளுக்கு பயம் ஏற்படுத்துவதா? கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் எனக்கு அழைத்து நமக்கு உதவி செய்ய வந்து மத்திய அமைச்சரை சங்கடம் படுத்தி விட்டோம் என தெரிவித்தனர்.

    தொழில் அமைப்புகள் உடனான கலந்துரையாடல் நிகழ்வு தொடர்பாக ஒரு மாதம் பணி செய்தோம், நம்ம தொழில் நலனுக்காக, 30% தொழிற் கூடங்கள் மின் கட்டண உயர்வால் மூடப்பட்டு வருவதையும், தமிழக அரசால் உதவி செய்ய தயாராக இல்லை, மூலப்பொருட்கள் பிரச்னை, தொடர்பாக பேச வந்த மத்திய நிதி அமைச்சர், மாநில அரசின் தவறான கொள்கையால் இந்த பகுதி தொழிற்துறை நசுக்கப்பட்டு உள்ளது. எம்.எல். ஏ ., வேலை தாண்டி செய்யப்பட்ட முயற்சி, ஒரு வீடியோ பற்றி செல்வது , நிகழ்வு தொடர்பாக பேசப்படாததும் வருத்தம் அளிக்கிறது.

Share This Article
Leave a review