தமிழகத்தின் 5 உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்தியாவின் முதல் தர உரிமத்தை இந்திய தர நிர்ணய அமைவனம் மூலம் சென்னை கிளை அலுவலகத்தால் வழங்கப்பட்டது
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலகம், அகில இந்திய முதல் உரிமம் வழங்கும் விழாவை 21ந்தேதி சென்னையில் நடத்தியது. பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் அதிகார வரம்பில் உள்ள பகுதியைச் சேர்ந்த, செங்கல்பட்டு பட்டர்ஃபிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிடெட், சென்னை அப்பாசாமி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட், கடலூர் கோவெஸ்ட்ரோ (இந்தியா) பிரைவேட் லிமிடெட், திருவள்ளூர் தமிழ்நாடு பெட்ரோபுராடக்ட்ஸ் லிமிடெட், கும்மிடிப்பூண்டி மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 5 நிறுவனங்களுக்கு இந்த உரிமங்கள் வழங்கப்பட்டன.
பிஐஎஸ் தென்மண்டல விஞ்ஞானியும் துணை தலைமை இயக்குநருமான திரு யுஎஸ்பி யாதவ் தொடக்க உரையாற்றினார். சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குநர் மற்றும் தலைவரும் விஞ்ஞானியுமான திருமதி.ஜி.பவானி, நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். விருது பெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அகில இந்திய முதல் உரிமம் வழங்கும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.