ஆன்லைன் கேம் விளையாட குடும்பத்தினர் கண்டித்ததை அடுத்து ஆத்திரத்தில் பிகரை சேர்ந்த நபர் ஒருவர் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் விழுங்கியுளார் .
1 1 /2 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் விழுங்கிய பொருட்களையெல்லாம் அப்புற படுத்திய மருத்துவர்கள் தற்போது அந்த நபர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
மற்றவர்களை விட தன்னை வித்தியாசமாகவும், சிறந்தவராகவும் நிரூபிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் வீட்டிலிருக்கும் உலோகப் பொருட்களை ஒவ்வொன்றாக அந்த நபர் யாருக்கும் தெரியாமல் விழுங்க ஆரம்பித்துள்ளார் .
வீட்டிலிருந்த சாவி கொத்து காணாமல் போனதை அறிந்த அவரது குடம்பித்தினர் அதனை தேடியுள்ளனர் . அப்போது அந்த நபரிடம் விசாரித்த போது , சாவி கொத்தை விழுங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார் .
மேலும் சிறிது நேரத்தில் அந்த நபரின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்துள்ளது . இதனால் அதிர்ந்து போன அவரது பெற்றோர் உடனடியாக அந்த நபரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .
அங்கிருந்த மருத்துவர்கள் சோனோகிராபி மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுத்த போது அவர் வயிற்றில் , சாவி கொத்து மட்டும் அல்லாமல் 2 நெக வெட்டிகள் , 4 இன்ச்சிலான கத்தி , மேலும் ஒரு சாவி உள்ளிட்ட உலக பொருட்களை அவர் விழுங்கியுள்ளதை கண்ட அறிந்தனர் .
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அமித் குமார், கூறுகையில், அந்த நபருக்கு ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இதன் பிறகு அவர் விழுங்கிய சாவி கொத்து மட்டும் அல்லாமல் 2 நெக வெட்டிகள் , 4 இன்ச்சிலான கத்தி , மேலும் ஒரு சாவி உள்ளிட்ட பொருட்களை அவரது வயிற்றிலிருந்து பத்திரமாக அகற்றியுள்ளோம் ” என்று தெரிவித்தார் .
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த நபர் தற்போது நலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார் .
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/case-filed-by-aiadmk-to-stop-formula-4-car-race-cannot-be-heard-as-urgent-case-supreme-court/
மேலும் அந்த நபரை குறித்து அவரது தாய் பேசும்போது , தனது மகன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாகவும் , எப்போதும் அவரது ஸ்மார்ட்போனில் வீடியோக்கள்/ரீல்களைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டுவந்ததால் , அவர் மனரீதியாக பலவீனமடைந்து காணப்பட்டதால் அவரை கேம் விளையாட கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்து , அவரது போனை கைப்பற்றியுள்ளனர் . இதனால் ஆத்திரத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று தெரிவித்தனர் .