ஏ.டி.எம் இயந்திரத்தை எப்படி கொள்ளையடித்து பணத்தை கொள்ளையடித்து திருடலாம் என்று பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோச்சிங் கிளாஸ் வைத்து கற்றுக் கொடுத்து வருகிறார்.
தற்போதைய காலங்களில் வங்கிகளில் தான் பொதுமக்கள் பணத்தை சேமித்து வைத்து வருகின்றனர். எந்த வேலையாக இருந்தாலும் சரி, வங்கி கணக்குகளுக்குத் தான் சம்பளம் ஏறுகிறது. தங்களுக்கு தேவையான பணத்தை ஏ.டி.எம்மிற்கு சென்று உடனே எடுக்கும் பழக்கம் இன்று எல்லாருக்கும் இருக்கிறது. பொதுமக்கள் நம்பத்தன்மையுடன் அதில் சேமித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.டி.எம்மை எப்படி எளிதாக உடைத்து கொள்ளையடிக்கலாம் என்பது பற்றி கோச்சிங் கிளாஸ் வைத்து பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்டர் நடத்தி வருகிறார்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்ற இளைஞர் 15 நிமிடங்களில் எப்படி ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து 3 மாத கோச்சிங் கிளாஸ் வைத்து நடத்தி வருகிறார். அந்த கோச்சிங் சென்டரில் படித்த நீரஜ் என்ற இளைஞர் லக்னோவில் ஏ.டி.எம்மில் கொள்ளையடித்துளார். இந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நீராஜிடம் விசாரணை செய்த போது தான் முழு உண்மையும் தெரிய வந்தது. மூன்று மாதம் கோச்சிங் கிளாஸ் முடித்த பிறகு 15 நாள்கள் நேரடி செய்முறை பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோச்சிங் கிளாஸ் நடத்திய பீகாரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.