தஞ்சையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை கொலை செய்து விடுவேன் என மிரட்டிய பிஜேபி பிரமுகர்.
தஞ்சாவூர் சிங்கப் பெருமாள் குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் 45,இவர் அதே பகுதியில் ஹரி கேட்டரிங் சர்விஸ் சென்டர் நடத்தி வருகிறார். ஹரிதாஸ் அவரது நண்பர் காரல் மார்க்ஸ் இருவரும் குடிப் போதையில் காரில் வந்துள்ளனர். சிங்கபெருமாள் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் காட்டு ராஜா காரை மறித்து உள்ளார்.
அவர்கள் காரை நிறுத்தாமல் போலீசார் மீது மோதுவது போல் வந்து நிற்காமல் சென்றுள்ளனர். பின் அந்த காரை விரட்டி சென்ற காட்டு ராஜா சீனிவாசபுரம் அருகே காரை மடக்கி பிடித்து எதற்காக நிற்காமல் வந்தீர்கள் என கேட்டுள்ளார். இதில் ஆத்திம் அடைந்த ஹரிதாஸ் மற்றும் அவரது நண்பர் காரல் மார்க்ஸ் பணியில் இருந்த ஆயுதப்படை காவலரை மோசமான அளவிற்கு ஆபாசமாக பேசி காரை எடுத்து செல்ல முயன்ற போது செல்போனில் படம் பிடித்தவாறு காவலர் காட்டு ராஜா யோவ் என்று அழைக்க கோபம் கொண்ட ஹரிதாஸ் நான் எவ்ளோ சம்பளம் வாங்குறேன் தெரியுமா.
நீ எவ்ளோ சம்பளம் வாங்குற என கேட்டுக்கொண்டே காவலரை அசிங்கமான வார்த்தைகளால் பேசியது மட்டும் அல்லாமல் தனியா வச்சி அடிச்சி விட்டுருவேன் என மிரட்டி காவலர் காட்டுராஜாவை தாக்கி உள்ளனர்.
நீ கவர்மெண்ட் சம்பளம் வாங்குற, யூனிபார்மை கழட்டிட்டு வா
உன்னை அறுத்து விடுவேன் என கூறி விட்டு காரை எடுத்து சென்று விட்டனர்.இதுகுறித்து ஆயுதப்படை காவலர் காட்டுராஜா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பணியில் இருந்த காவலரை கொலை மிரட்டல் விடுத்த ஹரிதாஸ் மற்றும் காரல்மார்க்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.