கும்பகோணம் அருகே 40 தெரு நாய்கள், வேட்டையாடி கொன்று குவிப்பு, நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்

2 Min Read
நாய் பிடிப்பவர்கள்

கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிமாக இருப்பதாகவும் சாலையின் குறுக்கே அடிக்கடி சென்று இருசக்கர விபத்துக்களை ஏற்படுவதாகவும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டீஸ்வரம் ஊராட்சி சுற்றித்திரியும் தெரு நாய்களை நள்ளிரவில் சுருக்கு கம்பி வைத்து சிலர் பிடித்து அடித்து கொன்றுள்ளனர். அப்போது சிலர், தெரு நாய்களை அடித்துக் கொள்ளக் கூடாது பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு விட வேண்டும் தெரு நாய்களை அடித்துக் கொள்ள யார் அதிகாரம் கொடுத்தது. என்று கேட்டு தடுத்துள்ளனர்

- Advertisement -
Ad imageAd image
நாய் பிடிப்பவர்கள்

இந்நிலையில், அடித்துக் கொல்லப்பட்ட நாய்கள் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், தெரிவித்த போது கடந்த இரண்டு நாட்களாக பட்டீஸ்வரம் ஊராட்சி தெருக்களில் சுற்றித் திரியும் 40க்கு அதிகமான தெருநாய்களை நள்ளிரவில் கம்பி சுருக்கு வைத்து பிடித்து அடித்துக் கொண்டுள்ளனர். தெரு நாய்களை ஏன் அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் ஊராட்சித் தலைவர் உத்தரவுப்படிதான் தெருநாய்களை பிடிப்பதாக கூறுகின்றனர்.

நாய் பிடிப்பவர்கள்

எனவே தெரு நாய்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஊராட்சி தலைவர் வெற்றிச்செல்வி கூறியபோது, பட்டீஸ்வரம் ஊராட்சியில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டதாகவும் சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்ந்து இருசக்கர வாகனம் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி விடுவதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பட்டீஸ்வரம்

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் பெயரில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. என் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக சிலர் தெருநாய்களை பிடித்தவர்களை முற்றுகையிட்டு தகராறு  செய்துள்ளனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டு தெருநாய்கள் பிடிப்பதை நிறுத்திவிட்டோம் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a review