மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி அரியணை ஏற காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது கடைசி கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
காங்கிரஸ் பிஜேபி இடையே நடைபெறும் கடும் போட்டியில் மக்கள் யார் பக்கம் என்பதை எதிர்பார்த்து இருக்கிறது இந்தியா. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல்களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸும், பிஜேபியும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் ஆளும் பிஜேபி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பாஜக ஒன்றிய அமைச்சர்கள், மற்றும் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் பம்பரம் போல சுற்றுசுழன்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு இணையாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு பல்வேறு இலவச திட்டங்களை கூட தேர்தல் அறிக்கையிலே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தில் மூன்று நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் ஈடுபட உள்ளார். அதன்படி இன்றும், நாளையும் பெங்களூருவில் உள்ள 18 தொகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 18 தொகுதிகளின் வழியாக பயணித்து மக்களிடையே பாஜகவின் ஆதரவு வாக்குகளை சேகரித்து இருக்கிறார் மோடி.
காங்கிரஸ் கட்சி என்ன சளைத்ததா என்கிற அடிப்படையில் பிரதமர் மோடிக்கு போட்டியாக காங்கிரஸ் முன்னால் தலைவர் சோனியா காந்தி ஹூப்பள்ளியில் இன்று நடக்கும் தேர்தல் பேரணியில் பங்கேற்கிறார்.’ காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் செட்டரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சோனியாவும், மோடியும் போட்டி பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் கர்நாடக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் இன்று மற்றும் நாளை பாஜகவின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஊர்வலமாக செல்ல உள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு காவல்துறை சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது.அதன் அடிப்படையில் பிரதமர் ஊர்வலமாக வரும் சமயத்தில் யாரும் மாடியில் நிற்க கூடாது, நுழைவு வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்படும், யாரும் வெளியே வரக்கூடாது ஊர்வலம் நடக்கின்ற பொழுது முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்படும். என, சில அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி பேசும்போது செல்போன் வீசிய சம்பவம் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எப்படியான கட்டுப்பாடுகள் இருந்தாலும் மக்கள் முதல்வரை தேர்ந்தெடுத்து விட்டார்கள் அது மே மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பிரதிபலிக்கும் என்கிற நம்பிக்கை எல்லோரும் மனதிலும் இருந்து வருகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.