Bangladesh-இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்து- சென்னை உயர் நீதிமன்றம்

2 Min Read
  • வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி.
  • சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
  • ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போரட்டம் நடத்த நீதிபதி அனுமதி.
  • வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த நிலையில் தற்போது நிலைமை சீரடைந்துவிட்டதால் போராட்டம் நடத்த தேவையில்லை: காவல்துறை.
  • இந்துக்கள் தாக்கப்படுவது, இந்து கோயில்கள் இடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது : மனுதாரர்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

 

வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலைக்கு சார்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும் ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறி, சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.உதயகுமார், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த நிலையில் தற்போது நிலைமை சீரடைந்துவிட்டதால் போராட்டம் நடத்த தேவையில்லை என்றார். மேலும், போராட்டத்திற்கு அனுமதிக்கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், இந்துக்கள் தாக்கப்படுவது, இந்து கோயில்கள் இடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

இதனையடுத்து, அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போரட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போரட்டம் நடத்துமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விதிகளை மீறி போரட்டத்தில் ஈடுப்பட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காலம் எனவும் தெரிவித்தார்.

Share This Article
Leave a review