வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதங்கள் முழுவதும் தமிழர்கள் வீதிகளில் தண்ணீர் தெளித்து பெரிய பெரிய கோலங்கள் போட்டு அசத்துவார்கள். பலர் பல வண்ணங்களில் கோலங்களை வரைந்து வண்ண பூச்சிகள் கொடுத்து அனைவரும் வியந்து பார்க்கும் விதமாக கோலம் போடுவது தமிழர்களின் பாரம்பரிய முறை. ஒவ்வொரு வீடுகளிலும் தங்கள் கோலத்தை இன்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் போடுவது வழக்கம். கோலங்களில் புள்ளி வைத்த கோலம், கோடு கோலம், பட்டை கோலம், வட்ட வட்ட கோலம் என்று இன்னும் பல வகைகளில் போட்டு அசத்துவார்கள் மகளிர்.

மார்கழி மாதம் முடிந்து தை மாதம் தொடங்கினாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் வீதிகளில் கோலமிட்டு மகிழ்வார்கள் தமிழ் பெண்கள். அந்த வகையில் தங்கள் எண்ணத்தில் உதிக்கும் கருத்துக்களை கோலமாக வரைவது தமிழர்கள் மிகச் சிறந்த கலை. அப்படி தான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செருவங்கி கிராமத்தைச் சேர்ந்த தமிழினியாழ் என்கிற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி தங்கள் வீட்டின் வெளியே வரைந்து அசத்திய கோலம்தான் இப்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
அப்படி என்ன கோலம் போட்டார் தமிழினியாழ் என்றால் அந்தக் கோலத்தை பற்றி எழுதியாக வேண்டும் அவசியம். ஆம் தன்னுடைய வீட்டு வாசலில் வாக்கு சீட்டு முறையே மீண்டும் வேண்டும். வாக்குப்பதிவு இயந்திர முறையை ஒழிக்க வேண்டும். என வாக்கு சீட்டு முறையை வரவேற்கும் விதமாகவும் வாக்கு இயந்திரத்தை ஏர் கொண்டு உடைப்பது போலவும் மிகச் சிறப்பாக அந்த கோலத்தை அவர் வரைந்து உள்ளார்.
இதே கருத்தை திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வெளியிட்டு வருகின்றார்கள். பொருளாதாரத்திலும் மற்ற செயல்களிலும் சிறந்து விளங்கும் நாடான அமெரிக்காவில் கூட இன்றுவரை ஓட்டு சீட்டு முறை தான் உள்ளது தேர்தலில். அதுபோன்ற ஒரு மாற்றத்தை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்த மாணவி இந்த கோலத்தை வரைந்துள்ளார். இந்த மாணவி மூலம் பலரையும் சிந்தனையில் அழுத்தியுள்ளது இந்த கோலம் அது மட்டும் அல்லாமல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்த கோலம் .
பள்ளி மாணவியின் இந்த செயல்பாடு தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு மாற்று கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆவல்.