கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 22 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கோயம்புத்தூரில் 1998ஆம் ஆண்டு கோவையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.இந்தக் குண்டுவெடிப்பு சம்பத்துக்கு பின்னால் அல் உம்மா பயங்கரவாத இயக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அந்த இயக்கத்தின் தலைவர் பாட்ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அல் உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாட்ஷா மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில்,அவர் “29 ஆண்டுகளாக எனது தந்தை சிறையில் உள்ளார். குண்டுவெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட குறைவான தண்டனையை தனது தந்தை அனுபவித்துவிட்டார்.எனவே, எனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
மேலும், தனது தந்தைக்கு 85 வயது ஆகிறது; அவரின் முதுமையை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை (அக்.18) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் ராஜ் திலக் ஆஜராகி பாட்ஷா ஜாமினுக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாட்ஷாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.அதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளார்.