- ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான சென்னை கோடம்பாகத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்களுக்கும் கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார்.
இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், சம்மந்தப்பட்ட மனுதரார் மூன்று பேருக்கு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதம் வைத்திருந்தனர். இவர்களுக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டுள்ளனார். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.இதே போல் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பல வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/arani-river-basin-floods-excess-water-of-1000-cubic-feet-per-second-flows-out-and-reaches-a-redtipalayam-lake/
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், மனுதரார்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர். எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.