தலைக்குப்புற டிரைனிங்., மிருகத்தனமான தாக்குதல்.! என்சிசி பயிற்சியாளர் எங்கே.?

0
40
என்சிசி மாணவர்கள்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொட்டு மழையில் என்சிசி மாணவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஷாக் சம்பவம் தானேவில் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பொதுவாக நமது கல்லூரிகளில் படிப்பைத் தாண்டி நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். விளையாட்டுப் போட்டிகள், ரெட் க்ராஸ் போன்ற அமைப்புகளில் மாணவர்கள் ஆர்வமாகக் கலந்து கொள்வார்கள். அதேபோல என்சிசி அமைப்பிலும் கூட மாணவர்கள் இருப்பார்கள். மற்றவற்றைக் காட்டிலும் என்சிசியில் கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருக்கும். ராணுவத்தில் இருப்பதைப் போலப் பல கட்டுப்பாடுகள் இருக்கும்.

பயிற்சி

மகாராஷ்டிரா:

இருப்பினும், சில நேரங்களில் அங்குப் பயிற்சியின் போது நடக்கும் சம்பவங்கள் அத்துமீறுவதாக அமைந்துவிடும். அப்படி நடந்த ஒரு சம்பவத்தின் ஷாக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது. தானேயில் உள்ள கேஜி ஜோஷி கலைக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் டிரைனிங்கில் இருக்கும் மாணவர்கள் உதவி கேட்டுக் கதறி அழுகிறார்கள்.

அதில் கொட்டும் மழையிலும் அந்த என்சிசி மாணவர்கள் டிரைனிங் நடந்து வருகிறது. மழையால் நிலம் சேறும் சகதியுமாக மாறியுள்ள நிலையில், அதில் தலையை வைத்து கிட்டதட்ட தலை குப்புற நின்று அவர்கள் பயிற்சி எடுத்துள்ளனர். அவர்கள் பெரிய பைப் ஒன்றைக் கொண்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். சீனியர் மாணவர் ஒருவர் பெரிய பைப்பை கொண்டு அவர்களைத் தாக்குகிறார்.

கொடூர தாக்குதல்:

மாணவர்கள் ஒழுங்காக ஒழுங்காக டிரைனிங்கில் இல்லை என்று கூறி தாக்கப்படுகிறார்கள். அந்த மாணவர்கள் அனைவருமே 18-20 வயதுடையவர்கள் என்பதைப் போலவே தெரிகிறது. சீனியர் என்சிசி மாணவர் ஒருவர் தான் அவர்களைத் தாக்கியுள்ளார். இதனை அங்கே அருகில் ஒரு கட்டிடத்தில் இருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொட்டும் மழையில் இப்படி கொடூரமாக மாணவர்களைத் தாக்குவது எல்லாம் என்ன டிரைனிங் என்று பலரும் சாடி வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் சாடி வருகின்றனர். இதற்கிடையே அந்த கல்லூரியின் முதல்வர் இது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

பயிற்சி

நடவடிக்கை:

அதில் அவர், “என்சிசி பிரிவில் இருக்கும் சீனியர் மாணவர் தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடந்த போது என்சிசி பயிற்சியாளர் எங்கே சென்றார் என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அங்குப் படித்த முன்னாள் மாணவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தாங்களும் கூட என்சிசியில் இருந்ததாகவும் இருப்பினும் அப்போது இதுபோல மோசமான தண்டையை எல்லாம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here