பண்டாரவாடை பேருந்து நிறுத்தத்தில், நின்று செல்லாத பேருந்தை நிறுத்த முயற்சி.

1 Min Read
  • தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா (48). இவர் பண்டாரவாடை செல்வதற்காக கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏற முயற்சி செய்தார்.

அப்போது நடத்துனர் பண்டாரவாடை நிற்காது என கூறி அவரை பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பண்டாரவாடை பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில்..

- Advertisement -
Ad imageAd image

அங்கு உள்ளவர்கள் நிற்க மறுத்த அந்த பேருந்தை சாலையில் வழிமறித்தனர். அப்போது சுமார் 60-பேர் பயணிகளுடன் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் சீருடை இல்லாமலும் மற்றும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தொடர்ந்து பயணிகளின் நலன் கருதி இது போன்ற பிரச்சினைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/father-rajacholans-death-ceremony-was-held-with-much-criticism/

இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகை சமயங்களில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

Share This Article
Leave a review