போடிநாயக்கனூரில் பேருந்து நிலையம் அருகில் பர்னிச்சர் கடைக்கு சென்ற மெக்கானிக்கை பட்டப் பகலில் அறிவாளால் வெட்டிக் கொலை முயற்சி. பின்னர் கடையில் உள்ள வீடியோ ஆதாரங்களை வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.காயம் அடைந்தவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் தேவாரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் இன்று காலை புது காலனி சந்தன மாரியம்மன் கோவில் தெரு அருகில் வசித்து வருபவர் முருகேசன் என்பவர், இவர் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

இவர் வசித்து வரும் பகுதியில் வசித்து வருபவர் தமிழன் என்பவர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் முருகேசன் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவாரம் சாலையில் உள்ள வீட்டு உபயோக பொருள்கள் கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து வந்த தமிழன் கடைக்குள் நுழைந்து தான் கையில் மறைத்து வைத்திருந்த அருவாளால் முருகேசனை முதுகிலும் தோள்பட்டையிலும் அரி வாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனால் படுகாயம் அடைந்த முருகேசனை அப்பொழுதில் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கடையில் உள்ள சிசிடிவி வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து அறிவாளன் தாக்கி விட்டு தப்பிய நபரை அடையாளம் கண்டு அவரை தேடி வருகின்றனர்.
அறிவாளால் வெட்டிய தமிழன் என்பவர் மீது ஏற்கனவே பல காவல் துறையில் போலீஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளது என குறிப்பிடத்தக்கது. சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.