காஞ்சிபுரம் மாவட்டம், சேக்குப்பேட்டை கவரை தெரு பகுதியில் ஒரு இளைஞர் வீடு புகுந்து பெண்ணின் வாயை கையை வைத்து அடைத்து கொள்ளை முயற்சியை அரங்கேற்றிய சம்பவம் இளைஞர் கைது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபோதையில் தள்ளாடிய படி கொள்ளையன் வீட்டை நோட்டமிட்டு, வீடு புகும் மற்றும் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரல். போலிசார் விசாராணை. அப்பகுதி பெரும் பரபரப்பு.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேக்குப்பேட்டை கவரை தெருவை சேர்ந்த பாலாஜி என்பவர், டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் மனைவி துர்காபாய் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பாலாஜி தனது கடைக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர் பகுதிகளில் பிற்பகல் வேளையில் மேல் மழை பொழிவானது காணப்பட்டது.

அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி அங்கும் இங்குமாக சுற்றி, மழைக்கு ஓரம் ஓதுங்குவது போல் பாலாஜியின் வீட்டின் வெளிப்புறத்தில் நின்று நோட்டமிட்டவாறு பாலாஜி வீட்டினுள் நுழைந்து அவரது மனைவி துர்காபாய்-ன் வாயில் கையை வைத்து அடைத்து, அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை சங்கிலியை அறுக்க முற்பட்ட போது அந்த பெண்மணியின் கழுத்திலிருந்த தாலி மணியை அறுப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து தங்க நகை சங்கிலியை அறுக்க முற்பட்ட போது அவரது மனைவி துர்காபாய் கத்தி கூச்சலிட அவரது சத்தத்தை கேட்டு உணர்ந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியின் வீட்டிற்கு ஓடோடி வந்து கொள்ளையனை சுற்றி வளைத்து, கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கின்றனர்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து இது குறித்து விஷ்ணு என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருகிலுள்ள காஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பெயரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை மீட்டு, விசாரணை நடத்தி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மதுபோதையில் இளைஞர் கொள்ளை சம்பவத்தை அறங்கேற்ற அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததும்,பொதுமக்கள் அவரை பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.