விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் குவாரி வருவதற்கு சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். அவர்களை மணல் குவாரி நடத்துகின்ற குழுவினர் ஆட்களை வைத்து மிரட்டுவதும், அடிக்கு துணிவதும் என தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்தனர்.

தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர் ராஜா நேற்று இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது மர்ம நபர்களால் வழிமுறைத்து தாக்குதலுக்கு உள்ளானார். தாக்குதலுக்குள்ளான ராஜா முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நடந்த சம்பவத்தை காவல்துறை வாக்குமூலம் பெற்ற போது, விபத்து என்று சொல்லுங்கள். என்று வற்புறுத்தி உள்ளார்கள்.
மணல் அள்ளுவதற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் மணல் கொள்ளையர்கள் ராஜாவை தாக்கியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டும் யாரும் கைது செய்யப்படவில்லை. மாவட்ட நிர்வாகமும் காவல்துறை கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட ராஜாவும் கருதுகிறார்கள்.