தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – அரசு நடவடிக்கை எடுக்க டிடிவி வேண்டுகோள்.

0
77
டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிகை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதோடு படகில் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில், தற்போது கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக கருதாமல் உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிகை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here