முதல் இடத்தில் அம்பானி! அதானி 3வது ! 2ஆவது யார் தெரியுமா.?

0
103
அம்பானி அதானி

ஆசியாவின் டாப் 3 பணக்காரர்கள் குறித்த பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கும் நிலையில், இரண்டாம் இடத்தில் இருப்பவர் குறித்து  தெரிந்து கொள்ளலாம்.

நமது நாட்டில் ஏகப்பட்ட கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். அதிலும் கடந்த சில ஆண்டுகளில் நாம் பல கோடீஸ்வரர்களை உற்பத்தி செய்துள்ளோம். அவர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்தே உள்ளது. இதன் மூலம் ஆசியா மட்டுமின்றி உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலிலும் கூட இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். இதற்கிடையே இப்போது ஆசியாவின் டாப் பணக்காரர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

பெரும் பணக்காரர்கள்:

இதில் இந்தியாவில் இருந்து பல கோடீஸ்வரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் டாப் இடங்களில் உள்ளனர். இருவரும் ஏற்கனவே பலமுறை ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ​​இருவரும் ஆசியாவின் பணக்காரர்கள் டாப் இடத்தில் உள்ளனர்.

ஃபோர்ப்ஸின் ரியல்டைம் பில்லியனர் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அம்பானி 91.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறார். இதில் சில மாதங்களுக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்த அதானி இப்போது மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 52.3 பில்லியன் டாலராக இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் யார்:

இருவருக்கும் இடையில் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் யார் தெரியுமா! அவர் தான் ஜாங் ஷான்ஷன். யார் இவர்? இவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
எப்படி இவர் 2ஆவது இடத்தை பிடித்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். சீனாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன். இவர் தான் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

68 வயதான ஜாங் ஷான்ஷானின் நிகர மதிப்பு 64.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அங்குள்ள பிரபல நோங்ஃபு ஸ்பிரிங் என்ற கூல் டிரிங்கஸ் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்,மேலும், பெய்ஜிங் வான்டாய் பயோலாஜிக்கல் பார்மசி எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கொரோனா டெஸ்டிங் கிட்களை பெருமளவு சப்ளை செய்த நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்தார்:

இவர் தனது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன், கட்டிடத் தொழிலாளியாகச் சிறிது காலம் பணிபுரிந்துள்ளார். பிறகு செய்தித்தாள் நிருபராக பணியாற்றிய இவர்,
சிறிது காலம் மதுபான விற்பனை முகவராகவும் வேலை செய்துள்ளார். அதன் பிறகு பிஸ்னஸ்களை ஆரம்பித்த இவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற ரேஞ்சிற்கு இவர் முன்னேறி இருக்கும் நிலையில், இவர் பெரிய பட்டங்களைப் பெற்றவராக இருப்பார் என நினைப்பீர்கள்.

ஆனால், உண்மை அது இல்லை. இவர் பள்ளி படிப்பை கூட முழுமையாக முடிக்காதவர். பள்ளி செல்லும் போதே, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதைக் கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். மிகப் பெரும் பணக்காரராக இருந்த போதிலும், அவர் அப்போதும் லைம் லைட்டில் இருந்து தள்ளியே இருப்பார். ஊடகங்களுக்குப் பேட்டி, நேர்காணல், என எதற்கும் இவர் வர மாட்டார். சீனாவின் ஹாங்சோவில் வசிக்கும் இவர் ரொம்பவே அரிதாகவே ஊடகங்களுக்குப் பேட்டி தருவார். இதனால் சீன ஊடகங்கள் இவரை lone wolf என்றே குறிப்பிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here