அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைப் போல, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவர்க்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கப்படும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயனடைவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஏழை, எளிய வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாணவர்களின் வாழ்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம்..
இனி, பகுதி நேர வேலை செய்து பட்ட துயரம் நீங்கி படிப்பில் கவணம் செலுத்த முடியும் மாணவர்கள்

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்க உள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கிவைத்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 85 உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும், 9057 மாணவர்கள் பயனடையும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் 9057 மாணவர்களுக்கு “டெபிட் கார்டு” வழங்கப்பட்டது..
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, உள்ளிட்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேட்டி அளித்த தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம்….
ஏழை, எளிய வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் என அனைவருக்கும் பெரும் பயனளிக்க கூடிய திட்டம் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் எந்த அளவிற்கு பெண்களுக்கு உயர்கல்விக்கும், வாழ்வாதாரத்திற்க்கும் பயன் அளிக்கின்றதோ அதே போல் ஆண் குழந்தைகளுக்கும் பெரும் பயனை அளிக்கும் என்றார்..
இனி பகுதிநேர வேலை செய்து பட்ட துயரம் நீங்கும், படிப்பில் கூடுதல் கவணம் செலுத்த முடியும், பெற்றோர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் இத்திட்டத்தை எங்களுக்கு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்கின்றனர்..
பிரியங்கா பங்கஜம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்