- புத்தாடை ,அழகுப் பொருட்கள் வாங்கக் குவிந்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி.தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் புத்தாடை, வாங்கத் தொடங்கிவிட்டனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தஞ்சையில் திரும்பிய பக்கமெல்லாம் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
கிராமப்புறங்களிலிருந்து ஏராளமானோர் தஞ்சை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளி, முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.
தஞ்சை காந்திஜி சாலை, அண்ணாசாலை, கீழராஜவீதி. தெற்குவீதி. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கூட்ட நெரிசல் உள்ளது, இதன் காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-prisoner-who-said-that-there-is-no-food-in-puzhal-jail-has-been-kept-in-solitary-confinement/
மழை இல்லாத காரணத்தினால் தீபாவளி பண்டிகைக்காகத் தஞ்சையில் ஏராளமான தரைக்கடைகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.