கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்த மர்ம நபர் ஒருவர், அலுவலக அறை கதவு மற்றும் உள்ளே இருந்த மேஜை டிராவை உடைத்து அதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதே நாளில் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரிடம் இளைஞர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்றதாக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கண்ணம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின் முறனாக பதிலத்துள்ளனர்.இதில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை அதிகப்படுத்தியுள்ளனர்.பின்னர் அந்த இளைஞர்கள் இரு வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது போத்தனூரில் வசித்துவரும் யூனுஸ் உசேன் மற்றும் சமீர் என்பதும், தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.இவர்கள் ஈரனிய நாட்டை சேர்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இருவரிடமிருந்தும் 2 லட்சம் ரூபாய் பணம், 4 சவரன் நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது கூட்டாளியான மோகல் ஜாபர் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.நீண்ட நாட்களாக வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இந்த இளைஞர்கள் போலீசிடம் சிக்கியுள்ளது இப்போது தான்.தொடர்ந்து இந்த பகுதில் போலீசார் கண்கானித்து வருகின்றனர் இந்த பகுதியை.