ஓட்டுனர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்துதியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா இவர் பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.இந்த நிலையில் ஜீவிதாவின் தாயர் ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் என்பவர் நாட்றம்பள்ளி பகுதியில் ஹோண்டா ஷோரூமில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இதனையடுத்து ஜீவிதாவும் சரண்ராஜும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் எனவும்
பின்னர் ஜீவிதா சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக பேசவில்லை எனவும் தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் நேற்று ஜீவிதாவின் கழுத்து அறுத்து படுகொலை செய்து தப்பி ஓடி தலை மறைவானார்.

ஒருதலைகாதல்
மேலும் சரண்ராஜ் செல்போனில் தானும் ஜீவிதமும் நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகவும் தற்போது தற்கொலை செய்து கொள்வதாகவும் மேலும் இறந்த பின்பு ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் எனவும் பேசி வீடியோவும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சரண்ராஜை நாட்டறம்பள்ளி போலீசார் வலைவீசி தேடி வந்தநிலையில் வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடைக்கு முன்பு தலைமறைவாக இருந்த சரண்ராஜ் சாவகாசமாக அமர்ந்து இருப்பதாக பொதுமக்கள்.

கைது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையிலும் அவருடைய உத்தரவின் பெயரில் தனிப்படையினர் விளக்கம் நத்தம் பகுதிக்கு விரைந்து சென்று சரண்ராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவர் ஏற்கனவே தான் மருந்து குடித்து விட்டதாக கூறியதால் உடனடியாக நாற்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மேலும் சரண்ராஜ் ஓ பி சி என்று சொல்லக்கூடிய பூச்சி மருந்து குடுத்திருப்பதால் மேல் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர் அதன் அடிப்படையில் சரண்ராஜை உயர்தர மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்குப் பின்பு சரண்ராஜ் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் கொலை குறித்த மேலும் உண்மை தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.