- அமேஷானில் ஆர்டர் போட்டு ஹைட்ராலிக் கட்டர் மிஷின் வாங்கி சத்தமே இல்லாமல் பீரோ, லாக்கர். பூட்டு ஆகியவற்றை நூதன முறையில் உடைத்து டெல்டா மாவட்டங்களில் தொடர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்த 3 கொள்ளையர்களை கைது செய்து உள்ள காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தி வந்த லாக்கரையும் பறிமுதல் செய்து உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டது. தனி படையினர் சந்தேகத்தின் பேரில் திருத்துறைபூண்டியை சேர்ந்த குமரேசன் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது பெரிய நெட் ஒர்க் வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கன்னியாகுமரியை சேர்ந்த வேல்முருகன். கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியை சேர்ந்த ஸ்கெட்ச் நாகராஜ் இவர்கள் மூன்று பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் தனி தனியாக விசாரணை செய்த போது,
மூன்று பேரும் சேர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் ஐயப்பன் சிலையை திருடி தங்க சிலை என நினைத்து விற்கும் போது மாட்டி கொண்ட உடன் தப்பி வந்தது தெரிந்தது . மன்னார்குடியில் ஒரு வீட்டில் லாக்கர் உடைத்து தங்க நகைகளை திருடி விட்டு லாக்கரை குளத்தில் வீசி விட்டு சென்றதும் தெரிகிறது. இவர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற அமேஷானில் கை அடக்க ஹைட்ராலிக் கட்டர் ஆர்டர் செய்து வாங்கி நவீன தொழில் நுட்ப முறையில் பீரோ, லாக்கர். பூட்டு. இரும்பு கதவு உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது 15 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு இருக்கிறது.
பேட்டி: சோமசுந்தரம் ,
நகர காவல் துணை கண்காணிப்பாளர்