இளைஞர்களிடம் அதிகரிக்கும் போதைப் பழக்கம்.,பெற்றோர்கள் அதிர்ச்சி.!

3 Min Read
திண்டிவனம்

போதைக்கு அடிமையானவர்கள் அதிகரித்து தான் வருகின்றனர் இதை கட்டுப்படுத்துகிறவர்கள் பேரளவிற்கு செயலாளர்கள் கடமை உணர்வோடு போலீசார் செயலாற்ற வேண்டும்

- Advertisement -
Ad imageAd image

இளைஞர்களிடம் தற்போது அதிகரிக்கும் போதை ஊசி பழக்கத்தால் அவர்களின் எதிர்காலம் பாழாவதை என்னும்போது அதிர்ச்சியுடன் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலக அளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் போதைப் பொருட்கள்.
இந்த போதைப் பொருட்களால் தனி மனிதன், குடும்பம், சமுதாயம் என அனைத்து வகைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளி கல்லூரி பருவத்தில் தீய நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் உருவெடுத்து வருவது தான் இந்த போதை பழக்கம்.

மாத்திரைகள்

இந்த போதைப் பழக்கம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அப்பழக்கத்தில் நுழைந்த இளைஞர்களால் அதில் மாண்டது மற்றுமல்லாமல் மீள முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது பல பெற்றோர்களின் குமுறல். போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை சமுதாயத்தில் அவர்களுக்குள்ள மரியாதை, அந்தஸ்து,வேலை, நட்பு, உறவு என அனைத்திலும் விரிசல்களை ஏற்படுகிறது. போதை பொருட்கள் பல்வேறு வகைகளில் உள்ளது. குறிப்பாக மது, ஹெராயின், பெத்தனால், ஊசி, கஞ்சா, புகையிலை, பான் மசாலா என அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமீப காலமாக திண்டிவனம் நகரில் இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்து வருகிறது என்று அப்பகுதி மக்களும் அங்கு வேலை செய்யும் அலுவலர்களும்
அங்கு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளும் தங்களால் தாங்க முடியவில்லை என்று இந்த போதைப் பொருளின் குற்றங்களை அடுக்கிக் கொண்டே போகின்றனர். சில மாதங்களுக்கு முன் போதை ஊசி மாத்திரை விற்பனை செய்பவரை திண்டிவனம் போலீசார் கூண்டோடு கைது செய்து போதை ஊசி மற்றும் மாத்திரைகளை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு முன் கிடங்கள்-1 வண்ணாங்குளம் சந்திப்பில் போதை ஊசி விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடம் போதை ஊசி குளுக்கோஸ் மாத்திரை மற்றும் போதை மாத்திரைகள் என பல போதை பொருட்களை பறிமுதல் செய்தனர் போலீசார்.

அதிலும் முக்கியமாக பெண்களுக்கு பிரசவ காலத்தில் வலிக்காமல் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது இந்த ஆய்வில் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் லைசன்ஸ் பெற்ற மருந்தகங்கள் மூலம் ஆன்லைனில் போதை ஊசி மாத்திரைகளை மொத்தமாக ஆர்டர் செய்து வாங்குகின்றனர் என்றும் பகிர் தகவல் வெளியாகியுள்ளது.

பின் திண்டிவனம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று போதைக்கு அடிமையான பள்ளி கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் போதை பொருட்களை கொடுத்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. ஒரு மாத்திரை பத்து ரூபாய் என்றால் இதனை 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். திண்டிவனத்தில் நாளுக்கு நாள் இளைஞர்களிடையே போதை மாத்திரைகளும் போதை ஊசிகளும் அதன் பழக்கங்களும் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெற்றோர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. போதைப் பழக்கத்தை ஒழிக்க சைல்ட் லைன், விழுப்புரம் மாவட்ட போலீசார் ஒருங்கிணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

ஆனால் துளி அளவு கூட போதைப் பழக்கம் ஒழிவது அல்ல குறைவது கூட இல்லை என்கின்றனர் மக்கள். போதைக்கு அடிமையானவர்கள் அதிகரித்து தான் வருகின்றனர் இதை கட்டுப்படுத்த பெயரளவிற்கு செயல்படாமல் கடமை உணர்வோடு போலீஸ் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a review