குஷ்புவை கைது செய் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

2 Min Read
ஆர்பாட்டம்

சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்கிற கருத்தை வெளியிட்ட நடிகை குஷ்புவை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் திரைப்படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு பேசப்படும் இயக்குனர் சுந்தர் சி யின் மனைவியும், திரைப்பட நடிகையான குஷ்பூ அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்கிற கருத்தை சாதிய வன்முத்தோடு பட்டியில் சமூக மக்களின் மொழியை குறிப்பிட்டு இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளதை கண்டித்து குஷ்பு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தியும், இனிவரும் காலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் சுந்தர் சி அவர்களுடைய மனைவி குஷ்பூ ஆகிய இருவருடைய திரைப்படங்களையும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் ஆர்பாட்டம்

குஷ்புவின் இந்த பதிவு பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், தொடர்ந்து குஷ்பு பல கட்சிகளில் அங்கம் வகித்து தற்போது பிஜேபியில் அடைக்கலமாகி இருப்பது அந்த கட்சியின் கொள்கைக்கு சாதகமாக எதை வேண்டுமானாலும் பேசுவது என்கிற நிலைப்பாட்டில் இருந்தார். தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சித் தலைவர்களும் பட்டியலின மக்களை இப்படி அவமானப்படுத்துவது கிடையாது. குஷ்பூ இப்படி தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டதை யாரும் கண்டிக்க முன்வரவில்லை என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். அந்த வகையில் இந்திய குடியரசு கட்சி தொடர்ந்து குஷ்புக்கு எதிராக பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இது போன்ற கருத்துக்கள் வெளிவருவது குறிப்பிட்ட சமூக மக்களை அவமானப்படுத்துவதாகவே கருதப்படுகிறது. ஆனாலும் இது தொடர்பாக குஷ்பு தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே குஷ்பூ பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பட்டியலிட மக்களை அவமதிக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் குஷ்பு பதிவிட்டு இருப்பதை நீக்குவது மட்டுமல்லாமல் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கூற வேண்டும் என்றும் இந்திய குடியரசு கட்சியினர் தெரிவித்தனர்.

ஆர்பாட்டம்

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குஷ்பூக்கு எதிராக முழக்கங்களையும் அவரது கணவர் சுந்தர் சி க்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சி பெருந்திட்ட வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த ஏராளமான ஒரு கலந்து கொண்டனர் இந்த ஆர்பாட்டத்திற்கு இந்திய குடியரசுக் கட்சி மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கி நடத்தினார்.

Share This Article
Leave a review