அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்ட கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 320 விவசாயிகளிடமிருந்து 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.நிலம் கையகப்படுத்தப்படும் போது கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகை குறைவாக உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் அடிப்படையில் சில வழக்கில் ஏக்கர் ஒன்றிற்கு வட்டியுடன் 13லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அரசு சிமெண்ட் ஆலை மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.இதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோடை போட பொருட்கள் கொண்டு வந்த லாரியில் இருந்து பொருட்களை இறக்க அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் கிராம விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்பொழுது தங்கள் வழங்கிய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிவிட்டு சுண்ணாம்பு கல் சுரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை மீறி நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றால் உயிரை மாய்த்துக் கொள்ளவும் தயாராக இருப்பதாக கிராம மக்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்