ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட இருப்பதாக, அம்மாநில ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார்.
அது என்ன அறிவிப்பு?
ஹரியானா மாநிலத்தில் முதியோர்கள், கணவனை இழந்தோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருமணம் ஆகாதவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரியானாவில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2750 பென்ஷன் வழங்கப்பட உள்ளது.

யார் யாருக்கு பென்ஷன் கிடைக்கும் ?
ஹரியானா அரசு, இந்த திட்டத்திற்கு சில விதிகளை நிர்ணயித்துள்ளது. அதில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமாகாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
மேலும், அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஹரியானாவில் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையர் யாராவது தவறினால் அவர்களுக்கு பென்ஷன் வழங்கும் நடைமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.