தஞ்சையில் மூதாட்டியின் கண்ணீரை துடைத்த காவலர் தவறவிட்ட ஐந்து பவுன் நகையை ஒரு மணி நேரத்தில் மீட்டு மூதாட்டியிடம் கொடுத்த காவலருக்கு பாராட்டு .
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம் மேல திருப்பத்துருத்தி நடுபடுகையை சேர்ந்தவர் அம்சவல்லி என்ற மூதாட்டி வயது 70 .
அவர் இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மளிகை சாமான் வாங்கிக் கொண்டு தனது ஊருக்கு செல்லும் எண்59 ஏலாக்குறிச்சி அரசு பேருந்தில் கூடையை வைத்துவிட்டு கீழே இறங்கி தனது பேரன் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்க சென்றுள்ளார் .

அம்சவல்லி கூடையை வைத்துவிட்டு பேருந்தை விட்டு இறங்கி சென்ற சமயத்தில் அந்த அரசு பேருந்து ஆனது பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்று விட்டது. உடனே அந்த மூதாட்டி அங்கு காவல் உதவி மையத்தில் பணியில் இருந்த பெண் தலைமை காவலர் மாதவியிடம் தகவலை சொல்லி இருக்கிறார் .
தகவலின் அடிப்படையில் காவலர் மாதவி உடனடியாக பழைய பேருந்து நிலையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேற்கு காவல் நிலையத்திற்கு குற்ற பிரிவு உதவி சிறப்பு ஆய்வாளர் சம்பந்தம் அவர்களிடம் தகவலை தெரிவித்து இருக்கிறார் .
சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் உடனடியாக பெண் தலைமை காவலரிடம் நீங்கள் சென்று பஸ் டைம் கீப்பர் அலுவலகத்தில் தகவலை சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார் ,அந்தப் பெண் காவலரும் டைம் கீப்பேர் அலுவலகத்தில் பணியில் இருந்த பணியாளர்களிடம் சொல்லி இருக்கிறார்.

உடனடியாக அவர்களும் சம்பந்தப்பட்ட பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தொடர்பு கொண்டு மூதாட்டி காய்கறி பை பஸ்ஸில் வந்துவிட்டது .அதன் உரிமையாளர் இங்கே இருக்கிறார் அதை பத்திரமாக எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று தகவல் சொல்லி இருக்கிறார் .
அதன் அடிப்படையில் அவர்கள் அந்த பையை பத்திரமாக எடுத்துக்கொண்டு திரும்ப பஸ் நிலையம் வந்த பிறகு அதனை டைம் கீப்பர் மூலமாக தகவல் தெரிவித்த பெண் காவலர் மாதவியிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் ,அந்தப் பையை சோதனை செய்த போது மூதாட்டியின் ஐந்து பவுன் நகை மற்றும் 1500 ரூபாய் பணம், சாவி இருந்தது தெரியவந்தது.
மீட்கப்பட அனைத்தையும் பத்திரமாக மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் சம்பந்தம் அறிவுறுத்தலின் பேரில் நகைகளை தவறவிட்ட மூதாட்டி அம்சவள்ளியிடம் ஒப்படைத்தார் .
மூதாட்டி தனது பையை காணவில்லை என்று சொல்லியவுடன் துரிதமாக செயல்பட்டு மூதாட்டியின் 3 இலட்சம் மதிப்புள்ள 5 பவுன் நகை, பணம் மற்றும் சாவியை ஒரு மணி நேரத்தில் மீட்டு தந்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார் .