தேசிய உலோகவியல் விருதுகள்-2023 க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
114
உலோகவியல் துறையில்

உலோகவியல் துறையில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக மத்திய அரசின் எஃகு அமைச்சகம் தேசிய உலோகவியல் விருதுகளை வழங்குகிறது.  இதில் செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.  தேசிய உலோகவியல் விருதுகள் – 2023க்கான விண்ணப்பங்கள் தொழில், ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

தேசிய உலோகவியலாளர் விருதுகள் திட்டத்தின் நோக்கம்:

உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி சேமிப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய இரும்பு மற்றும் எஃகு துறையில் பணிபுரியும் உலோகவியலாளர்களின் சிறந்த பங்களிப்பையும்,தற்சார்பு  இந்தியாவின் குறிக்கோள்களை அடைய அவர்களின் குறிப்பிட்ட பங்களிப்பையும் தேசிய உலோகவியல் விருதுகள் திட்டம் அங்கீகரிக்கிறது.

இவ்விருதுகள் பின்வரும் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும்:

வாழ்நாள் சாதனையாளர் விருது

தேசிய உலோகவியலாளர் விருது

இளம் உலோகவியலாளர் விருது

4.உலோக அறிவியல், இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது

விருதுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறைகள்:

07.08.2023 முதல் https://awards.steel.gov.in இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 06/09/2023 மாலை 05:00 மணி.

தேசிய உலோகவியல் விருதுகள் தொடர்பான தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விதிமுறைகள்,  நிபந்தனைகள் குறித்த வழிகாட்டுதல்களும் மேலே குறிப்பிட்டுள்ள வலைத்தள இணைப்பில் கிடைக்கின்றன.

இந்த திட்டம் இந்தியாவில் உலோகவியல் துறையில் தங்கள் பணி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது கல்வித் துறையில் பங்களித்த இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். விண்ணப்பதார்கள் 01/01/2023 முதல் பரிசீலிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here