கோவை கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம்- சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர்உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 5

1 Min Read
பலியானவர்

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியின் காம்பவுண்ட் சுவர் கட்டுமான பணியின் போது சுவர்  இடிந்து விழுந்து 4 பேர் பலி.

- Advertisement -
Ad imageAd image

பலியான நான்கு பேரில் கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் மூன்று பேரும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள், விபிஸ் கோயாஸ் மேற்கு வங்கத்தை சார்ந்தவர் என காவல் துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த வருள் கோயாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறைதினர் விசாரணை‌‌நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தனியார் கல்லூரியில் இன்று மாலை சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பரூன் கோஸ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

Share This Article

Leave a Reply