உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம்.
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படுவது ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் கோயில். மேலும் உலக பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோயிலுக்கு, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். நவராத்திரி திருவிழா துவங்கி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரூடையார் கோவிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடை பெற்றது.

இந்நிலையில் ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி திருவிழாவானது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 15ஆம் தேதி துவங்கியது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 5ம் நாளாக அன்னபூரணி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
மேலும் நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் அதேபோல் தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோவில்களான காளிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு தபசு அலங்காரமும், எல்லையம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு கஜலெட்சுமி அலங்காரம் மற்றும் கொங்கணேஸ்வரர் திருக்கோவிலில் துர்காம்பிகைக்கு சாகம்பரி (காய்கறி) அலங்காரமும், அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவையில் தபசு அலங்காரமும், ஸ்ரீசியாமளா தேவி அம்மன் கோவிலில் மாரியம்மன் அலங்காரமும் சிறப்பாக நிகழ்ச்சியாக செய்யப்பட்டது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தும் , சுவாமியை தரிசனமும் செய்தனர்.இதே போல் தினம் தோறும் சாமி வெவ்வேறு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.பக்தர்களும் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்வர்.நவராத்திரி விழாவை தொடர்ந்து ஐப்பசி மாத சிறப்பு பூசைகளும் நடைபெற இருக்கிறது.பக்தர்கள் ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.