திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்.. நாளை வெளியீடு. பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

3 Min Read
அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தினம், தினம் திமுகவை ஏதாவது ஒரு குற்றச்சாட்டு சொல்லிவருவதே வழக்கம். திமுகவும் அதற்கு முறையான பதில் சொல்வது கிடையாது.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். இவர் அந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு பாஜகவில் இணைந்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநில அரசுடன் அவ்வப்போது மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்.

அண்ணாமலை ரபேல் வாட்ச்

இந்த நிலையில் அவர் கையில் வெளிநாட்டு வாட்ச் கட்டியிருப்பதாகவும் அது பல லட்சம் மதிப்புடையது என்றும் அதை வாங்க அவருக்கு அத்தனை பணம் ஏது என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. தன்னிடம் ஆடு, மாடு மட்டும்தான் இருப்பாகவும் தான் ஒரு ஏழை விவசாயியின் மகன் என்றும் அண்ணாமலை கூறியிருந்ததால் வாட்ச் குறித்து பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலை ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் நான் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் அல்ல


செந்தில் பாலாஜி கேள்வி;

அது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களால் தயாரானது. இது போல் உலகில் 150 வாட்ச்கள் மட்டுமே இருக்கும். அதை நான் வாங்கி அணிந்திருக்கிறேன். நான் இந்தியன், என் மூச்சு இருக்கும் வரை இந்த வாட்சை கட்டியிருப்பேன் என்றார். இந்த வாட்ச்சை வாங்கியதற்கான ரசீது வேண்டும் என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டார்

ஏப்ரல் 1 வெளியீடு;

தன்னிடம் வாட்ச்க்கான பில் இருப்பதாக கூறிய அண்ணாமலை அதை வெளியிடுவது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் தொடர்ந்து அந்த வாட்ச்க்கான பில் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் வாட்ச்க்கான பில்லை ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.

செந்தில் பாலாஜி அண்ணாமலை

ரபேல் வாட்சின் பில்;

அது போல் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் தனது சொத்து தகவல்களையும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி அண்ணாமலை அந்த ரபேல் வாட்ச்சின் பில்லை வெளியிடவில்லை. இந்த நிலையில் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை ஏப்ரல் 14 ம் தேதி வெளியிடுவாரா என்ற சந்தேகம் இருந்தது.

டிவிட்;

ஆனால் இன்றைய தினம் அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டு அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறார். அந்த ட்வீட்டில் நாளை காலை 10.15 மணிக்கு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அவருடைய சொத்து பட்டியல் குறித்து எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

டிவிட்டரில்என்ன சொல்லியிருக்கிறார்;

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். DMK Files என்ற அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க. முத்து, மு.க. அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதிமாறன் உள்ளிட்டோரின் படங்களுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். துபாய் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் துபாயில் முதலீடுகளை ஈர்க்க சென்ற போதிலிருந்தே அண்ணாமலை முதல்வரின் துபாய் பயண விவகாரத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக அவ்வப்போது தெரிவித்து வந்தார். அது குறித்து பல்வேறு சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் நாளை காலை என்னென்ன பட்டியல் வெளியாகும் என்ற ஆர்வம் தற்போது தொற்றிக் கொண்டுவிட்டது.

Share This Article
Leave a review