தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்கு விருது – வாழ்த்து கூறிய அண்ணாமலை

1 Min Read
உதயசங்கர்

தமிழில் ‘ஆதனின் பொம்மை’ நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என உதயசங்கர் நெகிழ்வு அடைந்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

திருகார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்கு எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளது என ராம் தங்கம் நெகிழ்வு அடைந்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”தமிழ் எழுத்தாளர்கள் இருவர், இந்திய இலக்கிய உலகின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி இந்த நாளைச் சிறப்பாக்கியிருக்கிறது.

ராம் தங்கம் 

‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக, சிறந்த குழந்தை இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய பால புரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும், வாழ்வியலைப் பேசும் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர்  ராம் தங்கத்துக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review