DMK FILES :ரபேல் வாட்ச் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை

1 Min Read
அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தை சார்ந்த உதயநிதி ஸ்டாலின் , கனிமொழி , சபரீசன் உற்பட 12 திமுக கட்சியினரின் சொத்துப்பட்டியலை இன்று பாரதிய ஜனதாக்கட்சியின் சென்னை அலுவலகத்தில் அண்ணாமலை வெளியிட்டார்.

- Advertisement -
Ad imageAd image

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ரபேல் வாட்ச் தொடர்பான பலதரப்பட்ட விமர்சங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார் .

அவர் பேசுகையில் என் உதவியாளர்களுக்கான ஊதியத்தை என்னுடன் படித்த நண்பர்களே கொடுக்கின்றனர்.வீட்டு வாடகை, ஊழியர்கள், சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் கட்சிக்காரர்கள் மற்றும் என் நெருங்கிய நண்பர்கள் தான் பார்த்துக்கொள்கிறார்கள் . எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் https://enmannenmakkal.com/ வெளியீட்டுள்ளேன் , என்று கூறினார் .

மேலும் அவர் பேசுகையில் எம்பிஏ படித்தபோது வாங்கிய 11 லட்ச ரூபாய் கடனை 7 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் தான் கட்டினேன் . இந்தியாவில் 2 நபர்கள் மட்டுமே ரபேல் வாட்ச் வாங்கியுள்ளனர் . அதில் ஒரு வாட்ச்-ஐ நான் தற்போது வைத்திருக்கிறேன் .

இந்த வாட்ச் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர்
2021 இல் வாங்கினார்; மற்றொன்று மும்பையைச் சேர்ந்தவர் வைத்துள்ளார். கோவை ஜிம்சன் எனும் நிறுவனத்தில் ரபேலின் 2ஆவது வாட்ச் ராம கிருஷ்ணனுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது . நான் அந்த வாட்சின் மீது இருந்த பற்றினாள் தேய் ஆண்டு மே 27ஆம் தேதி வாங்கினேன் .

2021 மார்ச் மாதத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கிய இந்த ரபேல் வாட்சை ஜிம்சன் நிறுவன உதவியுடன் அவரிடமிருந்து  நான் வாங்கினேன் . நான் எந்த ஒரு லஞ்ச பணத்திலும் இந்த ரபேல் வாட்சை வாங்கவில்லை,  மார்ச் மாதம் வாங்கியவர், மே மாதத்தில் என்னிடம் கொடுத்தார். என கூறினார்.

Share This Article
Leave a review