பொதுச் செயலாளர் பதவியில் இனி அனில் அந்தோணி.! சி.டி.ரவிக்கு கல்தா.!

0
29
அனில் அந்தோணி

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பதவியில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவியை நீக்கிவிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகனுக்கு தேசிய பாஜக அப்பதவியை கொடுத்துள்ளது.


மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. கால அளவில் சொல்ல வேண்டுமானால் இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. தற்போது பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை நோக்கி பயணிக்கிறது. அதிமுகவும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அது போல் திமுகவும் ராமநாதபுரத்தில் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. எனவே தமிழகத்தில் பல கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

சி.டி.ரவி அனில் அந்தோணி

பாஜக 3ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. எதிர்க்கட்சிகளோ “இந்தியா” என்ற கூட்டணியை ஏற்படுத்தி பாஜக அரசு வெல்லாதவாறு வியூகம் வகுத்து வருகிறது.


கடந்த முறை பெரும்பாலான மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளில் பாஜகவே வென்றது. ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியால் அந்த வெற்றி வாய்ப்பு என்பது கடினமாக இருக்கும் என தெரிகிறது. வடமாநிலங்களில் மட்டுமே சோபித்து வந்த பாஜக தற்போது தென் மாநிலங்களில் கால் ஊன்ற துடித்து வருகிறது.

ஏ.கே.அந்தோணியின்

வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பாஜக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் புதிய தேசிய துணைத் தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த கட்சியில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சி.டி.ரவி கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தோல்வியை தழுவினார். அவரை அங்கீகரிக்க அவருக்கு இந்த முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இவர் தமிழக தேர்தல் பொறுப்பாளராக உள்ள நிலையில் அந்த பதவியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணியை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியிமித்துள்ளார். அது போல் தெலுங்கானா முன்னாள் பாஜக தலைவரான பண்டி சஞ்சய் குமார் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here