ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு..!

2 Min Read
ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் விபத்து

ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள கண்டகபள்ளி விரைவு ரயில்கள் வந்து கொண்டிருந்த போது திடிரென்று சற்று நேரத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு கோர பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குண்டூரில் இருந்து புறப்பட்டு ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி சென்ற பயணிகள் இரண்டு ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு.

இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார். இதில் பயணிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ஆந்திர மாநிலம், ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள பயணிகள் மற்றும் தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.அவசர உதவி எண் அறிவிப்பு. இந்த கோர விபத்து துயர நிகழ்வில், 19 பேர் மரணமடைந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் பயணம் செய்து வந்த பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் விபத்து

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் விபத்துக்களானது. இந்த துயர நிகழ்வில், 19 பேர் மரணமடைந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம். விரைவு ரயில் குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.

அப்போது, அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் திடிரென்று ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் வந்து மோதிக் கொண்டு கோர பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ராயக்கட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் ரயில் தண்டவாளத்தில் தடம் புரண்டது.அப்போது பயணம் செய்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் விபத்து குறித்து தகவல் தெறிவித்தனர்.

ரயில்வே அதிகாரிகள் விபத்தில் சிக்கி கொண்ட பயணிகளை காப்பாற்றினர்

விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் விபத்தில் சிக்கி கொண்ட பயணிகளை காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருட்டு மற்றும் மின்சார வயர் அறுந்து விழுந்தது ஆகிய காரணங்களால் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a review