போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளி..!

2 Min Read
ஆந்திர குற்றவாளி

போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளியை துப்பாக்கியால் சூட்டு பிடித்த போலீசார்.ஓசூரில் அப்பகுதி பெரும் பரபரப்பு சம்பவம்.

- Advertisement -
Ad imageAd image

சமீப காலமாக, காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டரைவாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் தொழிற்சாலையில் வட மாநில வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதன் புகார் சம்பந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி என்பவர் விசாரிக்க சென்றார். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பொழுது, எதிர்பாராத விதமாக காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டு காவல் துறையினரை தாக்கியுள்ளனர்.

ஓசூர் அரசு மருத்துவமனை

ஆந்திர மாநிலம், அனந்த்புர் மாவட்டம், குந்தக்கல் பகுதியை சேர்ந்தவர் ஷேக் நாம் தார் உசேன் என்பவர் வயது 34. இவர் மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஓசூர் பகுதிகளிலும் இவர் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக ஓசூர் அக்கோ போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு சென்று, நாம் தார் உசேனை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிடித்து வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரை இன்று போலீஸார் ஓசூர் திருப்பதி மெஜஸ்டிக் என்ற பகுதியில் திருட்டு வழிப்பறி நடந்த இடத்தில் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர், அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, போலீசார் மூன்று பேரையும் சரமாரியாக தாக்கி தப்பித்து ஓட முயன்று உள்ளார். இதனையடுத்து எஸ்ஐ வினோத் தான் வைத்திருந்த துப்பாக்கியை தற்காப்புக்காக அவரை துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்துள்ளார். இதில் அவருக்கு வலது காலில் முட்டிற்கு கீழ் பலத்த காயம் ஏற்பட்டது. குற்றவாளி நாம்தார் உசேன் தாக்கியதில் அக்கோ காவல் நிலைய எஸ்.ஐ வினோத் தலைமை காவலர் ராமசாமி முதல் நிலை காவலர் விழியரசு ஆகிய 3 பேருக்கு கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளி

அவர்கள் தற்போது அருகில் உள்ள ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல வலது காலில் குண்டடிபட்ட நாம் தார் உசேன் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம்
அக்கோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த காவலர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் வினோத் ஆகியோரை டி.எஸ்.பி பாபு பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

 

Share This Article
Leave a review