புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிவதாஸ் மீனாவிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!!

1 Min Read
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிவதாஸ் மீனாவிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,”சவால்களை முறியடித்து அரசு நிர்வாக எந்திரத்தை முன்னெடுத்துச் செல்லவும், சமூகநீதி காக்கும் பணிகளை மேற்கொள்ளவும்.

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள  சிவதாஸ் மீனா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜஸ்தான் மாநிலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த அவர், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக  உயருவதற்கு அவரது நிர்வாகத் திறமையே காரணம்.

நெருக்கடியான சூழல்களை திறம்பட சமாளிப்பதில் அவர் சிறந்தவர் என்பதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியாக அவர் ஆற்றிய பணிகளே சான்று. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பிலும் அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.  சமூகநீதியை நிலைநாட்டுதல், முக்கிய சிக்கல்களில் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து சவால்களிலும் வென்று முத்திரைப் பதிக்க வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review