பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக திருவண்ணாமலையில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.!
நெய்வேலி என்எல்சி விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து அந்தப் பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.
பாமக தலைவர் போராட்ட களத்தில் கைது செய்யப்பட்டது அறிந்த அவரது ஆதரவாளர்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு போராட்டங்களையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் காந்தி சிலை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.