கர்நாடகாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.பெண் விமானி உட்பட இருவர் உயிர்தப்பினர்

1 Min Read
உயிர் தப்பிய விமானிகள்

கர்நாடகாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.வழக்கமான பயிற்சிதான் என்று கூறப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image

அது இந்திய விமானப் படையின் கிரண் ரக பயிற்சி விமானம் என்று சொல்லப்படுகிறது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சாம்ராஜ்நகர் அருகே திடீரென அதிபயங்கர சத்தம் கேட்டது அதனை தொடர்ந்து பொது மக்கள் அந்த பகுதியில் சென்று பார்த்த போதுவிமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

தீயணைப்பு பணி

பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானத்திலிருந்த பெண் விமானி உட்பட இருவரும் உயிர் தப்பினர்.ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் தெரிய வில்லை காரணத்தைக் கண்டறிய விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இன்னமும் அந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

Share This Article
Leave a review