தேனியில் பயங்கரம் மதுப்பழக்கத்தினால் தனது கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம்…

0
124
மதுக்கடை

தினமும் மது அருந்திவிட்டு போதையில் பிரச்சனை  செய்து வந்த கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, மனைவியே சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துள்ளார். தேனி அருகே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேனி மாவட்டம் பாலகோம்பை அருகே ராயவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் மது பிரியர் இவரது மனைவி அழகு சின்னு . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் க இருவரும் திபின்னர் அரிவாள் எடுத்து சண்முகவேல் கை, கால், தலை ஆகிய பகுதிகளில் அவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த  சண்முகவேல் பரிதாபமாக துடிதுடித்து சம்பவஇடத்தில் உயிரிழந்தார்.ன கூலி வேலை பார்த்து வந்தனர்.

மதுபிரியரான சண்முகவேல் வேளைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு, மனைவி அழகுசின்னுவிடம் பிரச்சன்னை  செய்து வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதைபோல் கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவரிடம் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அழகுசின்னு சமையல் அறையில் இருந்து மிளகாய் பொடி எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவியுள்ளார். இதனால் ஏற்பட்ட எரிச்சலால் வலியில்  துடித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவரை கொலை செய்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சண்முகவேல் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவேலை குத்தி கொலை செய்த அவரது மனைவி  கைது செய்யப்பட்டார்.

பின்னர் அழகுசின்னுடம் நடத்திய விசாரணையில், “கொலை செய்யப்பட்ட சண்முகவேல், அழகுசின்னு ஆகியோருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். உறவினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சேர்ந்துள்ளனர்.

மதுபழக்கம் கொண்ட சண்முகவேல் குடித்துவிட்டு போதையில் அழகுசின்னுவிடம் அடிக்கடி தகராறு   செய்துள்ளார். இதனால் அவருடன் வாழ பிடிக்காத அழகுசின்னு, கணவரை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார்.வழக்கம்போல் குடித்துவிட்டு தகராறு செய்த கணவர் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் கொலை செய்தேன் என்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் .

மதுப்பழக்கத்தினால் மேலும் ஒரு குடும்பம் சிதைத்துவிட்டது தனது கணவனை  மனைவி கொடூரமாக  கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here