சிவகாசி அருகே சானார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பயங்கர வெடி விபத்து 2,அரைகள் முற்றிலும் சேதம்.

1 Min Read
பட்டாசு ஆலை

சிவகாசி அருகே சானார்பட்டியில் காளையார்குறிச்சியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கு  சொந்தமான எல்.வி.ஆர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு செய்யும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.‌‌மேலும் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை வேலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பட்டாசு தயாரிக்கும் பணியை பாதியில் நிருத்தி விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

இந்நிலையில் தீடிரென   ஏற்பட்ட இடி, மின்னல் காரணமாக எதிர்பாராதவிதமாக இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 2 அரைகள் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் அருகில் இருந்த 3 அறைகளில் தீயானது பரவியதால் அதில் இருந்த பொருட்கள் முறறிலும் எரிந்து சேதமடைந்தது.

இதனைத் தொடர்ந்து தகவலறிற்று  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்து குறித்து புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்  தொழிலாளர்கள் யாரும் உள்ளே இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Share This Article
Leave a review